Blogs

image
  • Share:
உருவில் இரண்டானவன்
11 Mar 2022

இருபெரும் உருவங்கள் :

சைவ நெறியில் இறைவனை மூன்று வடிவமாக வழிபடுகிறோம் - அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு, உருவ வழிபாடு. அருவம் என்றால் உருவம் இல்லாத வழிபாடு. அருவுருவம் என்றால்  அருவமும் அல்லாத உருவமும் அல்லாத சிவலிங்க வழிபாடு. உருவம் என்றால் உருவ வழிபாடு,  ஆனால் எப்படிப்பட்ட உருவத்தை வழிபடுவது? இறைவன் நம் சிற்றறிவுக்கு ஏற்றவாறு சற்று கீழ் இறங்கி அறுபத்திநான்கு உருவங்களின் மூலம் காட்சி அளிக்கிறான். அதில் மிக சிறந்த உருவம் ஆடல்வல்லானின் ஆனந்த தாண்டவக்கோலம்.

ஆகமம் முறை படி ஆலயத்தில் மூல நாதர் எப்பவுமே சிவலிங்க வடிவத்தில் தான்  இருக்கும். சிவபெருமானின்  இலிங்க வடிவத்திற்கான காரணத்தை பல சித்தாந்த/வேதாந்த கருத்துக்கள் இருந்தாலும், தமிழர்களின் நெறியான சைவ சித்தாந்தம்/திருமுறைகள்  தான் நமக்கு அடிப்படை ஆதாரம், அதுவே நமக்கு சரியான பதில் அளிக்க முடியும்.  இலிங்கம் என்ற உருவத்திற்கு தொடக்கம் முடிவு கிடையாது. பேர் அண்டமே இலிங்கவடிவில் (cosmic egg)  தான் இருக்கிறது,   அண்டத்தில் விண்மீன்கள் (Galaxies) முதல் நம் உடம்பு, ஆத்துமா வரை  எல்லாம்  இலிங்க வடிவில்தான் இருக்கிறன்றது  என்கிறது திருமந்திரம். 

இறைவனின் இயக்கத்தின் வெளிப்பாடுதான்  நடராஜரின் திருக்கூத்து. அருவத்தை தவிர மற்ற இரண்டு உருவங்களை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

இருபெரும் விழாக்கள் :

இவ்விரு பெரும் சிவ உருவங்களே வழிபாட்டிற்கு உகந்தவை என்று போற்றி நம் முன்னோர்கள் இரு பெரும் விழாவை இயற்றினர். அதில் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை; சிவலிங்கத்தின் பெருமையையும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை(ஆருத்ரா தரிசனம்) நடராஜரின் பெருமையையும் சைவர்களால் கொண்டாடப்படும் மிகச்சிறந்த திருவிழாக்கள் ஆகும். இதை திருஞானசம்பந்தர், "தொல் கார்த்திகை நாள்" என்றும், "ஆர்திரைநாள் காணாதே போதியோ" என்றும் தனது தேவார பதிகத்தில் குறிப்பிடுகிறார். 

இனி இரு உருவங்களின்  புராணங்களையும் மற்றும் அதன் தல சிறப்பையும்  பார்ப்போம். 

இருபெரும் தலங்கள்: 

திருவண்ணாமலை:

பஞ்ச பூதங்களை நாம் இலிங்க வடிவில் வழிபடுகிறோம். அக்னீ இலிங்கம் (திருவண்ணாமலை), மணல் இலிங்கம் (காஞ்சி), காற்று இலிங்கம் (திருகாளஹஸ்தி), ஜல இலிங்கம் (திருவானைக்கா), ஆகாய இலிங்கம் (சிதம்பரம்). 

பஞ்ச பூதங்களில் “தீ” சிறப்புக்குறியது, ஏனென்றால் அக்னீ ஒன்றுதான் புவீ ஈர்ப்பு சக்திக்கு எதிரே  செல்லக்கூடிய ஒரே பொருள்(element). அதே போல் அந்தணர்கள் ஓமகுண்டத்தில் இடும் பலி மேல் உலகத்துக்கு எடுத்து செல்லும் வாகனமாகவும் கருதப்படுகிறது. எந்த ஒரு பொருளின் நல்லதையும் தீமையும் சாம்பலாகி (Ash) ஒரே தன்மையதான பொருளாகிவிடும், அதே போல் இறைவனின் இத்தீ போன்ற தன்மை நம்மளுடைய பிறவி வினைகளை எரித்துவிடுவார் என்பது குறிப்பு.

சரி வரலாறு என்ன? பிரமர்க்கும் திருமாலுக்கும் கடும் வாக்கு வாதம், யார் பெரியவர் என்று. இவர்களுக்கு முன் சிவபெருமான் தோன்றி, யார் தன்னுடைய அடியையும் முடியையும் காணுகிறார்களோ அவரே பெரியவர் என்று ஒரு விளையாட்டினை தொடக்கி வைத்தார். சிவபெருமான் ஒரு பெரிய ஒளி-இலிங்க(Column of Fire/light) வடிவில் தோன்றினார், திருமால் பன்றி வடிவில் தோன்றி அடியை தேட தொண்டங்கினார், பிரமன் அன்ன பறவை வடிவில் தோன்றி முடியை காண தொண்டங்கினார். பல கோடி வருடங்கள் ஆகியும் காணமுடியாமல் விட்டுவிட்டனர். ஆனால் இருவரும் தன் தவறை உணர்ந்து இலிங்க வடிவமாக சிவபெருமானை நெடுங்காலம் வழிபட்டனர், இறைவன் அவர்கள் முன் தோன்றி திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல்களைச் செய்யுமாறு அருள்புரிந்தான் என்கிறார் திருமூலர் (2-3-3).இதை குறிக்கும் வகையில் திருவண்ணாமலையில் மலையே ஒளி-இலிங்க வடிவமாக இருக்கிறார் சிவபெருமான்.

திருஞானசம்பதரின்  தேவார பதிகத்தில், எட்டாம் பாட்டில், அடிமுடி தேடல் படலத்தை பற்றி குறிப்பு இல்லாமல் இருக்காது. அதில் ஒரு வரி "ஞானத்திரளாய் நின்ற பெருமான்  நல்ல அடியார்மேல், ஊனத்து இருளை நீக்குமது உண்மைப் பொருள்போலும்" - பொருள்: திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர்.  

சிதம்பரம்:

நடராஜர் திருமேனியும், சிவலிங்கத்திருமேனியும்  ஒன்றே என்கிறார் திருமூலர், ஆனால் தனது சக்தியுடன் ஆனந்த கூத்து இயற்றி  இந்த பிரபஞ்சம் முதல் அனைத்தை பொருளில்  அசைந்து இயக்குவதனின் வெளிப்பாடே நடராஜரின் திருகூத்து(Lord Shiva infuses momentum into the Universe which is represented as Nataraja). 

இந்த பிரபஞ்சத்தில், உள்ள சிறி துகள்  ‘அணு’, அதை நூறு கூறுகளால் பிரித்தாளும், அதனிலுள் ஏதோ ஒன்று அதை சுற்றி(ஆடி) கொண்டுதான் இருக்கும்.அந்த ஆட்டத்தினால் தான் ஈர்ப்பு சக்தி(Bonding) பிறக்கிறது, அதானல் பொருள்(elements) உண்டாகுகிறது. இந்த ஆட்டம் நின்றுவிட்டால் எல்லாம் நின்று விடும். உதாரணத்திற்கு இந்த உடம்பை ஒரு கோவிலாக பாவித்தால், ஜீவன் சிவலிங்கம், இருதயம் நடராஜர். இறைவனின் ஆட்டம் நின்றுவிட்டால் சிவமாகிய உடல் சவமாகிவிடும். இது நம் உடம்புக்குள் செய்யும் திருநடனம். இப்படி நடராஜரின் அசைவை நுண்துகளில் இருந்து பேர் அண்டம் வரையில் நாம் காணலாம்.

சிதம்பரம் பஞ்ச பூதங்களில் ஆகாய(Space) தலம். ‘சித்’ என்றால் ஞானம், ‘அம்பரம்’ என்றால் ஆகாசம், “ஞான ஆகாசம்” அல்லது “ஞானவெளி” என்று பொருள். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் தில்லை வனத்தில் உள்ள மூல நாதரை புலி கால் முனிவருடன் வழிபட, மார்கழி திருவாதிரை அன்று நடராஜர் தோன்றி காட்சி அளித்தார். நடராஜரின் உருவத்தில் ஐந்து தொழில் இருக்கிறது, படைத்தல், அழித்தல், காத்ததால், மறைத்தல், அருளல்(பஞ்சகிருதி), உடுக்கை படைத்தல் தொழிலையும், தீ அழிதல் தொழிலையும், வலது கை காத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளலையும், முயலகனை அடக்குவது மறைத்தல் தொழிலையும்  குறிக்கிறது. இவை அனைத்தும் சூட்சமாக, அஞ்செழுத்து மந்திரத்தில்  'ந ம சி வ ய' அடங்கி இருக்கிறது. 

மேலே சொல்லப்பட்ட மூன்ற