அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம்அன்றை?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றதும், நாம்அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா;---திருநீலகண்டம்!
`நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றால் பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீங்கள் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகாது. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
"(Devotees) you know the saying that the present suffering is the result of acts done in previous births. is it not a drawback to you sitting idle without any effort to save yourselves from that? we shall praise the feet of our master by doing manual service. we are his slave. our acts will not come in contact with us;tirunīlakantam(Lord Shiva) is our refuge and support."
-Thirugnanasambandar